
அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்
என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று (ஆகஸ்ட் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சுப்பிரமணியம், “என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் புதிதாக எதுவும் பயிரிடக் கூடாது; மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி
தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது. செப்டம்பர் 15- ஆம் தேதி வரை மட்டுமே பயிர்களை அறுவடைச் செய்வதற்கு அவகாசம்; அதற்கு மேல் பயிரிடக் கூடாது. அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 14 லட்சம் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளார்.