Homeசெய்திகள்தமிழ்நாடுதைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு - புதிய கூட்டணி உருவாகிறதா?

தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு – புதிய கூட்டணி உருவாகிறதா?

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, சசிகலா இன்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸை சந்திக்க உள்ளார்.தைலாபுரத்தில் பரபரப்பு: ராமதாஸுடன் சசிகலா இன்று திடீர் சந்திப்பு - புதிய கூட்டணி உருவாகிறதா?அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள சசிகலா, இன்று மாலை 4.30 மணி அளவில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்தச் சந்திப்பின் போது, வரும் தேர்தலில் பாமக மற்றும் சசிகலாவின் அஇபுதமமுக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடனான அதிருப்தி ஆகியவற்றுக்கு இடையே, ராமதாஸ் – சசிகலா சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சசிகலாவும், வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த ராமதாஸும் கைகோர்த்தால் அது தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மாலை நடைபெறும் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

MUST READ