Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!

-

 

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!

முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் சோனியா காந்தி.

ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் சோனியா காந்தி முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.

மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி முதன்முறையாகப் பதவியேற்றுக் கொண்டார்.

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட சோனியா காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், “சோனியா காந்தியின் துணிச்சலும், கண்ணியமும் நாடாளுமன்றத்தை வழிநடத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ