spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு

நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவரது இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட அந்த இளம்பெண், மேம்பாலத்தின் நடுவில் இருந்த தூணில் உள்ள கட்டையில் விழுந்தார்.

we-r-hiring

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதனை கண்டு அந்த பகுதியாக சென்ற இருவர் பெண்ணை மீட்க முயன்று, அவர்களாலும் வெளியே வர முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலிசார் ராட்சதடிராலி கருவி வாயிலாக மேம்பால தூணில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் படுகாயம் அடைந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ