Homeசெய்திகள்இந்தியாகபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

-

- Advertisement -

கபினி அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும் நிலையில் கபிலா நதி சுற்றி உள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்து வரும் அதிகாரிகள்.

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து கபினி கே ஆர் எஸ் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து இன்று வெளியேற்றப்படும் நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணையின் அருகே உள்ள நுகு அணையில் இருந்தும் சுமார் 4000 கனக நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கபிலா நதியில் தற்பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கபிலா நதி சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று இரவு பகலாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தியும் வெள்ளப்பெருக்கு உள்ள நதிகள் அருகே செல்ல வேண்டாம் என்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாக்கவும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆற்றில் இறங்கி குளிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

MUST READ