Homeசெய்திகள்இந்தியாரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி

-

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Image

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க தற்போதைய நிலைய தொடரும். சர்வதேச பொருளாதார காரணிகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதம் என்ற நிலையிலும், வைப்பு தொகை வசதி விகிதம் 6.25 சதவீதமாகவும் தொடர்கிறது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என MPC குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்தனர். சந்தை கணிப்புகள் படியே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது . MSF விகிதம் 6.75 சதவீதமாக தொடரும். இந்தியாவில் ரியல் ஜிடிபி 7.2 சதவீதம் FY23” என்றார்.

வங்கிக்கடன் வாங்கியோர் செலுத்தும் வட்டி மேலும் உயராது என்பதால் வாடிக்கையாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

MUST READ