Homeசெய்திகள்இந்தியாஅரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

-

 

அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!
File Photo

அரிசி ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, தற்போது அரிசி தவிடு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு, பால் உற்பத்தியை அதிகரிக்க, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், எண்ணெய் எடுக்கப்பட்ட பிறகான அரிசி தவிடு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசுத் தெரிவித்துள்ளது.

“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

முன்னதாக, உள்நாட்டில் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், கடந்த வாரம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை விதித்திருந்தது.இதனால் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, கவலைத் தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், தடையை நீக்குமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ