Homeசெய்திகள்இந்தியாமோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

-

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் தொகுதியில் ஜூன் 1 ஆம் தேதி நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனிடையே தீபக்குமார் என்ற விமானி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்த போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருப்பேன் என பொய்யான சத்தியம் செய்ததாக கூறியுள்ளார்.

மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு

மேலும் 2018 ஏப்ரல் 8 ஆம் தேதி தான் இயக்கிய விமானத்தை விபத்தை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க பிரதமர் நரேந்திர மோடி முயன்றதாகவும் மனுவில் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா மோசமான எண்ணத்தின் அடிப்படையில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி நீதிபதி உத்தரவிட்டார்.

MUST READ