spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..

உச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..

-

- Advertisement -
உச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை, குளிர் காலங்களில் அதாவது அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பிப்ரவரி மாதம் வரை காற்று மாசுவால் டெல்லி ஸ்தம்பித்து போகும்.. இந்தக் காலக்கட்டங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும். மோசமான வானிலை , தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை காரணமாக காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றின் தரம் 201 முதல் 300 வரை இருந்தாலே அது மோசமான , சுவாசிக்க தகுந்த காற்று அல்ல என குறிப்பிடப்படுகிறது.

உச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..

we-r-hiring

ஆனால் தற்போது டெல்லியில் காற்றின் தரம் 400 ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் மருத்துவமனைகளுக்கு படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக காற்று மாசுவால் குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இருமல், சளி, கண் எரிச்சல் , சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது. ஆகையால் குழந்தைகளின் நலன் கருதி இன்றும், நாளையும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும் , காற்று மாசுவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெருக்கடியை சமாளிக்க கட்டிடப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்துள்ள அம்மாநில அரசு, கனரக வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளது. இந்த காற்று மாசு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் டெல்லி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

MUST READ