Homeசெய்திகள்இந்தியாஇரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!

இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!

-

- Advertisement -

 

இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!
File Photo

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், உடல் நலக்குறைவால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான சத்யேந்திர ஜெயின், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று (மே 25) சிறையில் உள்ள கழிவறைக்கு செல்லும் போது, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில், காயம் ஏற்பட்டு தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயின் 35 கிலோ எடைக் குறைந்து, எலும்பு கூடுபோல் ஆகிவிட்டார் என உச்சநீதிமன்றத்தில் அவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ