ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்திருந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத மையங்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது. காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், திமுகவின் கனிமொழி, ஜே.டி.யூ. எம்.பி. சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலும் மற்றும் ஷிண்டே சிவசேனா கட்சியின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் ஒன்றிய அரசு குழுவை அமைத்தது. ஏழு குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழு சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப் பாட்டை விளக்க உள்ளனர்.
