Homeசெய்திகள்இந்தியாவிரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க்

விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் – ஹிண்டன்பர்க்

-

விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் – ஹிண்டன்பர்க்

அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அமல்படுத்த போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கௌதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கூறியது இந்தியாவில் புயலை கிளப்பியது.

அரேபிய நாடுகள், மொரிசியஸ், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாக கூறிய ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக வரவு செலவு கணக்குகளில் மோசடி செய்ததோடு வரியைப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

பங்குச்சந்தையில் துணிகிற முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்ததுடன் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் கௌதம் அதானிக்கு கடும் சரிவு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முழுதும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் யாரைப் பற்றிய விவகாரம் எப்போது வெளியாகும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

MUST READ