Homeசெய்திகள்இந்தியா'தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023'- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!

‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!

-

 

'தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023'- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!
File Photo

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

பலரும் எதிர்பார்க்கப்படும் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் சந்திரசேகர ராவின், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட காமாரெட்டி, காஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளிலும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

தற்போதைய நிலவரப்படி, தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 72 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி 35 தொகுதிகளிலும், பா.ஜ.க. 06 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 06 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

MUST READ