spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து... 7 பேர் உடல் சிதறி பலி!

மேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து… 7 பேர் உடல் சிதறி பலி!

-

- Advertisement -

மேற்குவங்கத்தில் தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் கைராசோல் பகுதியில் கங்காராம்சாக் – பதுலியா நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் பாறைகளை வெடிக்க வைப்பதற்காக இன்று காலை 10 மணி அளவில் சக்திவாய்ந்த வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் இருந்த வெடி பொருட்களை தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

we-r-hiring

அப்போது, எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ