spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

-

- Advertisement -

கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே திடீரென கடலில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

நாடு முழுவதும் நேற்றைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் கடற்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்தநிலையில் ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கடலிலேயே தரையிறக்கப்பட்டது. கடற்கரைக்கு மிக அருகே இருந்ததால் கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகுகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டன. ஹெலிகாப்டரில் இருந்த பைலட் உள்ளிட்ட மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மிதவை கருவிகள் மூலம் இலகு ரக ஹெலிகாப்டரும் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

விபத்தில் சிக்கிய இலகு ரக ஹெலிகாப்டர் த்ருவ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இரட்டை எஞ்சின் மற்றும் பல்வேறு பயன்பாடுகளை உடைய புதிய தலைமுறை ஹெலிகாப்டரான த்ருவ் ராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

MUST READ