கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரபட்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்பு அமர்வில் விசாரணை நடந்தது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிரான ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்நிலையில் பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், நாகரத்னா ஆகியோர் 2 தீர்ப்புகளை அளித்தனர். அப்போது பணமதிப்பிழப்பு வழக்கில் 6 அம்சங்களை வரையறுத்து தீர்ப்பாக வழங்கியிருப்பதாக நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவித்தார். ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்யமுடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஒன்றிய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தவறு எதுவும் இல்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்றிக் கொள்ள 52 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது போதாது எனக் கூற முடியாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தை இவ்வளாவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் ஒதுக்கிவைக்கக்கூடாது, பணமதிப்பிழப்பு செல்லும் என்பதில் இருந்து மாறுபடுகிறேன் என நீதிபதி நாகரத்னா மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நீதிபதிகள் 4 பேர் பணமதிப்பிழப்பு செல்லும் என தீர்ப்பு வழங்கிய நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபாட்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறார். பணமதிப்பிழப்பு வழக்கில் மேலும் பல கேள்விகளுக்கு தீர்வு காணவேண்டி உள்ளதால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கவாய் தெரிவித்தார். நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது.
