spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு: இந்தியாவுக்கு எந்த இடம்..?

உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு: இந்தியாவுக்கு எந்த இடம்..?

-

- Advertisement -

உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது? – இப்படி ஒரு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் நிபுணர்கள், வணிகர்களிடம் ஆய்வு நடத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஊழல் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியடப்பட்டது. இந்த பட்டியலில் 180 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

we-r-hiring

இந்த பட்டியலில் ஊழல்கள் அடிப்படையில் நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல்படி உலகிலேயே அதிக அளவு ஊழல் நிறந்த நாடு என்ற பெயரை தெற்கு சூடான் பெற்றுள்ளது. அந்த நாட்டுக்கு வெறும் 10 மதிப்பெண்கள்தான் கிடைத்துள்ளது. தெற்கு சூடானுக்கு அடுத்து ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 9 மதிப்பெண்களுடன் சோமாலியா 2-வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் வெனிசுவேலா 3-வது இடத்திலும் உள்ளது.

தீமைன்னு ஒண்ணு இருந்தா நன்மையும் இருக்கும்ல. அதேமாதிரி ஊழல் நிறைந்த நாடுகள் இருக்கிற அதே நேரத்தில், ஊழல் குறைந்த நாடுகளும் இருக்கு. அப்படி ஊழல் குறைந்த நாடுகள் லிஸ்டில் முதலில் இருப்பது டென்மார்க். அந்த நாட்டில் ஊழலே இல்லை என்று இந்த பட்டியல் தெரிவிக்கிறது. டென்மார்க்குக்கு அடுத்து ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் பின்லாந்து இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் 135-வது இடத்திலும், இலங்கை 121-வது இடத்திலும் உள்ளன. சீனா 76-வது இடத்திலும், வங்கதேசம் 146-வது இடத்திலும் உள்ளன.மற்ற நாடுகளை விட்டுத் தள்ளுங்கள். இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்னு கேட்கறீங்களா? உங்களுக்கான பதில் இதுதான்…

இந்த பட்டியலில் இந்தியா மொத்தம் 38 மதிப்பெண்களை வாங்கி 96-வது இடத்தில் இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு இந்தியா 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்தில் இருந்திருக்கிறது. எப்படியோ பாகிஸ்தானை விட கொஞ்சம் பெட்டரா இருக்கோம்னு நினைச்சு நம்ம மனசை ஆறுதல் படுத்திக் கொள்வோம்.

MUST READ