தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை “உரிய நேரத்தில் ஆராயப்படும்” உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.தேசிய புதிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கோரி பா.ஜ.க வழக்கறிஞர் ஜி.எஸ் மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாா். அந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெ.பி.பர்திவாலா அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும்,நீதிபதிகள் இந்த மனுவை தாக்கல் செய்ய நீங்கள் யார்? நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்று கொள்ளுங்கள் என்று கேள்வி எழுப்பினாா்.
அதற்கு, புதிய கல்விகொள்கையை அமல்படுத்தாதது மாணவர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என கருத்து தெரிவித்ததன் பேரில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்கள் என உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேவேளையில் ஒரு விவகாரம் அரசியல் சாசனத்துக்கு முரணாக உள்ளது என்றால் விசாரித்து உத்தரவு பிறப்பிப்போம். எனவே தற்போதைய இந்த விவகாரம் அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்தத்தோடு “உரிய நேரத்தில் ஆராயப்படும் ” எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
போர்கால கொள்முதலுக்கான அனுமதி பெறதேவையில்லை – மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!