spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசாலையில் சென்ற திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாலையில் சென்ற திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

-

- Advertisement -

சாலையில் சென்ற திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் சாலையில் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Kanaganapalli Car Accident

பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ஒரு குடும்பத்தினர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கார் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் கனகனப்பள்ளி மண்டலம் மாமில்லப்பள்ளி என்ற இடத்தில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

we-r-hiring

உடனடியாக காரில் இருந்தவர்கள் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்ட நிலையில், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரின் அதிவேகமாக சென்று டயர் வெடித்து சாலையின் டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கனகப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ