ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
வரி ஏய்ப்பு, போலி கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்க ஆதாருடன் பான் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் பான் அட்டைகளை இணைக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 51 கோடி பான் எண்கள் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ரூ.1,000 அபராதம் செலுத்திய பிறகே பான் எண்ணை இணைக்க முடியும். ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் நிரந்தர கணக்கு எண் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல் இழந்து விடும், அதன் பிறகு 30 நாட்களுக்குள் ஆயிரம் செலுத்தினால் பான் எண் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். பான் ஆதார் அட்டைகளை இணைக்க அவகாசம் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.