பேருந்து மீது டிரெய்லர் மோதல் – இருவர் பலி
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று டிரெய்லர் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.
ராம்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் மஹ்தோ என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சுடுபாலு பகுதியில், டிரெய்லர் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது என்றுதெரிவித்தார்.
ராஞ்சி-பாட்னா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ராம்கர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்று அதிகாரி கூறினார்.
வேகமாக வந்த டிரெய்லர் முதலில் டிவைடரில் மோதியதில் விபத்து ஏற்பட்டது, பின்னர் நான்கு வழிச்சாலையின் மறுபுறத்தில் பேருந்து மீது மோதியது என்று மஹ்தோ கூறினார்.
இது போன்ற விபத்தை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் நெடுஞ்சாலையில் போலீசாரை நியமித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. ராம்கர் வட்ட அதிகாரி சுதிர் குமார் கூறுகையில், உள்ளூர் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.
நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்தது.