Homeசெய்திகள்இந்தியாயு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

-

யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் யுஜிசி நெட் தேர்வு உள்ளது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு ஆண்டிற்கு இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி, நடப்பு ஆண்டு ஜூ ன் 18ஆம் தேதி முதற்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9,08,580 பேர் எழுதினார்கள். இந்த நிலையில், நெட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என தேசிய சைபர் கிரைமிலிருந்து யுஜிசிக்கு தகவல் கிடைத்தது. இதனால் நெட் தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

 

இதனால் புதிய தேர்வு தேதி எப்போது அறிவிக்கப்படும் என பட்டதாரிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் 2 பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

MUST READ