Homeசெய்திகள்இந்தியாஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா... கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… கடைசி விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்த பணியாளர்கள்!

-

- Advertisement -

விஸ்தாரா விமான நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் கடைசி விமானத்திற்கு பணியாளர்கள் ஒன்றாக நின்று பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

vistara
vistara

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர்இந்தியா நிறுவனத்தை அண்மையில் டாடா நிறுவனம் வாங்கியது. இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – டாடா நிறுவனத்தின் கூட்டணையில் செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தை, ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, நேற்றிரவு நள்ளிரவு 12 மணி முதல் விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக இயக்கப்படுகின்றன.

விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு சதவீதம் 25.1 சதவீதமாக உள்ளது. மேலும், விஸ்தாரா நிறுவன பணியாளர்கள் அனைவரும், ஏர் இந்தியா பணியாளர்களாக தொடர்கின்றனர். இந்த இணைப்பு மூலம்  இண்டிகோ விமான நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி, டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. டெல்லி புறப்பட்ட விஸ்தாரா விமானத்திற்கு, அந்த நிறுவன பணியாளர்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு கை அசைத்து பிரியாவிடை கொடுத்தனர்.

ஏர் இந்தியா – விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் சர்வதேச விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இதேபோல் முதல் உள்நாட்டு விமானமாக நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது.

MUST READ