spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகேரளா வளர்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமர் மோடி பேச்சு

கேரளா வளர்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமர் மோடி பேச்சு

-

- Advertisement -

விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவை பார்க்கும் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கேரளா வளா்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமா் மோடி பேச்சுகேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதில் பினராயி விஜயன், சசி தரூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் கடல் சார் பலம் அதிகரித்து வருவதன் அடையாளம் தான் விழிஞ்ஞம் துறைமுகம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் தான் குறைக்கும் எனவும் திருவனந்தபுரம் அருகே அதானி நிறுவனமும் கேரள அரசும் இணைந்து விழிஞ்ஞம் துறைமுகத்தை அமைத்துள்ளன எனவும் பிரதமா் மோடி தெரிவித்தாா். ரூ.8,867 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தால் மிகப்பொிய சரக்கு கப்பலை கையாள முடியும் என்று கூறினாா். பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதுமட்டுமல்லாமல், கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் எனவும் விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும் எனவும் கூறினாா்.

துணைவேந்தரை நியமக்க தேடுதல் குழு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

MUST READ