Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!

-

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகள் இன்று சர்வமத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை , சூரல்மலை , அட்டமலை உள்ளிட்ட கிராமங்கள் மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், தேசிய – மாநில பேரிடர் மீட்பு படையினர், மாநில போலிசார் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேப்பாடி பகுதியில் 17 நிவாரண முகாம்கள் உள்பட வயநாடு மாவட்டத்தில் 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உறவினர்களால் அடை யாளம் காட்ட முடியாமல் போன 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகளின் பாகங்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. புத்துமலா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 64 சென்ட் நிலத்தில் தயாரிக்கப்பட்ட கல்லறைகளில் அவர்களது உடல்கள் மற்றும் உடல் பாகஙகள் சர்வமத பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலச்சரிவில் உயிரி ழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ