மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 13ஆம் தேதி அறிவித்திருந்தது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை 294 தொகுதிகள் உள்ளன. அதன்படி,ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தொகுதியை பொறுத்தவரை 3.6 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.

இதனைத் தொடரந்து மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 29, 2026 அன்று நடைபெற உள்ள இந்த கட்டத் தேர்தலை முன்னிட்டு, 142 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் தேர்தல் அதிகாரிகள் முழு வேகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 29 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 2,407 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில்,
பாஜக சார்பில், சுவேந்து அதிகாரி (நந்திகிராம்/பவானிபூர்), திலீப் கோஷ் (கரக்பூர் சதார்), அக்னிமித்ரா பால், ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் தரப்பில் அதிர ரஞ்சன் சவுத்ரி (பஹரம்பூர்), பிரதீப் பிரசாத் (பவானிபூர்) உட்பட 284 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி, பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக போட்டியிடுகிறது.
தேர்தல் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு, ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி, மாநில வரலாற்றிலேயே அதிக வாக்குப்பதிவு என்ற சாதனை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலிலும் அதிக அளவில் வாக்காளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
