Homeசெய்திகள்இந்தியாமேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

-

- Advertisement -

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்ச்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும்  மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்துதிரிணமுல் காங்கிரஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் :-மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையில் மத்திய அரசு ஊழியர்களே பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் மாநில அரசு ஊழியர்களையும்  மேற்பார்வையாளர்களையும் நியமிக்க வேண்டும்.

ஆனால் மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே  பார்வையாளர்களாக நியமித்துள்ளார். குறிப்பாக ஏற்கனவே ஒரு மத்திய அரசு ஊழியர் மேற்பார்வையாளராக இருக்கும்போது கூடுதலாக அவருடன் ஒரு மாநில அரசு ஊழியரையும் ஒரு இணை மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட வேண்டும்.

we-r-hiring

தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையிலும்  மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், முற்றிலும் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுகிறது அதனால்தான் மாநில அரசின் ஊழியர்களையும் இணை மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்களோ அல்லது மாநில அரசு மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்களோ என்பது அல்ல மாறாக தேர்தல் ஆணையத்தின் திருப்தியே இந்த விவகாரத்தில் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால்தான் மாநில அரசின் ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

MUST READ