
மேற்குவங்கம் மாநிலம், பங்குரா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஒன்டா ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து, கரக்பூர்- பங்குரா- ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொலைத்தூர ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

லியோ-வை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டம் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
இந்த ரயில் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தில் காயமடைந்த ரயில் ஓட்டுநர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சரக்கு ரயில் விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த்க்கு ஜோடியாகும் நிரோஷா….. எந்த படத்தில் தெரியுமா?
அண்மையில், ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே இரண்டு பயணிகள் விரைவு ரயில்கள், ஒரு சரக்கு ரயில் மோதிய விபத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் பல்வேறு இடங்களில் ரயில்கள் அடிக்கடி தடம் புரளும் சம்பவங்கள் நிகழ்வதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.