குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர், வீடியோ வைரலாகியுள்ளது.
குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு யாஷ் தத்வி என்ற இளைஞர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
விருந்தாவன் சார் ரஸ்தாவுக்கு (Vrindavan Char Rasta) அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது, சாலையில் உயிரற்ற நிலையில் காணப்பட்ட பாம்பு குறித்த அழைப்பு வந்ததை அடுத்து விலங்கு நல ஆர்வலர்கள் ஒடனடியாக பதில் அளித்து செயல்பட்டுள்ளனர்.
வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை செய்து வரும் யாஷ் தத்விக்கு 1 அடி நீளமுள்ள பாம்பு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர் அறிகுறிகளைக் கவனித்துள்ளார். பாம்புக்கு முதல் 2 முறை மூச்சுக்காற்று கொடுத்துள்ளனார். ஆனால் அப்போதும் அசைவில்லாமல் இருந்த பாம்பு 3வது மூச்சுக்காற்றில் உயிர் பிழைத்தது. இவ்வாறு மூன்று நிமிடங்களுக்கு தந்துள்ளார்.
உயிர்பிழைத்த பாம்பை வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்த தட்வி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.