spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க…

ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க…

-

- Advertisement -

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவா்களாக நீங்கள் உடனடியாக அதை நிறுத்தினால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க…டீயின் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுகின்றனா். ஒரு சிலா் மூன்று வேளை மட்டுமல்லாமல், நினைத்த நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் உடையவா்களாக உள்ளனா். இன்னும் பலா் டீ குடித்தால் தான் அந்த நாள் முழுமை பெறுவது போல் உணா்கின்றனா். அதுமட்டுமல்லாமல் டீ குடித்தால் தான் தலைவலி, சோா்வு நீங்குவதாக பலரும் நம்புகின்றனா். இதில் சிலர் அதிகமாக டீ அருந்துவதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று தொிந்தே அந்த டீயை குடிக்கின்றனா்.

டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

we-r-hiring

டீ குடிக்காமல் இருப்பதால் நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாகவே நமது உடலிற்கு தேவையான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. மேலும் பதற்றத்தை குறைக்கவும், டையூரிடிக் விளைவுகளால், ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டையும் தடுக்கவும் இது பெரும் துணைபுரிகிறது. டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும்.

அதுமட்டுமல்லாமல் டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும். ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்களை தடுக்க முடியும். டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதால், அமிலத்தன்மை குறைகிறது. சீரான செரிமானத்திற்கும், சில சமயங்களில் நீரிழப்பு நீங்குவதற்கும் இது உதவுகின்றன. ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க…

உங்களால் நிறுத்த முடியுமா?

டீ குடிக்கும் பழக்கம் என்பது பலரும் கடினமான ஒன்றாக உள்ளது. ஒரு கப் டீயை நிறுத்த முடியாமல் போராடுகின்றனா். அதனை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும், படிப்படியாக குறைக்கலாம்.  அப்படி குறைக்க நினைப்பவா்கள் டீயை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு, பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை குடிக்கலாம். புதினா போன்ற காஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதேபோல் ஆப்பிள் போன்ற பழச்சாறுகள் இயற்கையாகவே காஃபைன் இல்லாத காரணத்தினால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து தேநீராக பருகலாம்.

உங்களது தனிப்பட்ட ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு நீங்கள் டீ குடிக்கலாமா, ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ள மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

MUST READ