spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

-

- Advertisement -

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே மீன்களை சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு கிட்டத்தட்ட 17 சதவீதம் குறைவதாக சொல்லப்படுகிறது. மீன்களில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?இது தவிர மீன்களில் புரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் வாரத்திற்கு இரண்டு முறை 100 முதல் 140 கிராம் அளவு ஒமேகா-3 நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில் சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி, ட்ரவுட் போன்ற மீன்கள் சிறந்த தேர்வாகும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் ஆகியவர்களுக்கு இந்த மீன் வகைகள் நல்லது. மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?அது மட்டும் இல்லாமல் மன அழுத்தத்தை குறைக்க மீன்களை சாப்பிடுவதுடன் சீரான உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி ஆகியவையும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிகளாகும். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

குறிப்பு:

பாதரசம் தடவிய மீன்களை தவிர்க்க வேண்டும். அடுத்தது அலர்ஜி இருந்தாலும் மீன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

MUST READ