Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீங்களும் ஒருமுறை வரகு அரிசி போண்டா செய்து பாருங்க!

நீங்களும் ஒருமுறை வரகு அரிசி போண்டா செய்து பாருங்க!

-

சிறுதானிய வகைகளிலேயே சாலச் சிறந்தது குதிரைவாலியும் வரகு அரிசியும் தான். வரகு அரிசியில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வரகு அரிசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருக்கின்றவர்கள் கண்டிப்பாக இந்த வரகு அரிசியை உணவாக சமைத்து சாப்பிட வேண்டும்.

வரகு அரிசியில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை காணலாம்.
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், சுண்ணாம்பு சத்து போன்றவை வரகு அரிசியில் காணப்படுகிறது.

எனவே வரகு அரிசியை எந்த வகையிலாவது நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது வரகு அரிசி போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.நீங்களும் ஒருமுறை வரகு அரிசி போண்டா செய்து பாருங்க!தேவையான பொருட்கள்:

வரகு அரிசி மாவு – கால் கிலோ
கடலை மாவு – கால் கிலோ
பச்சை மிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நான்கையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு மற்றும் கடலை மாவு முதலியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அந்த உருண்டையை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.நீங்களும் ஒருமுறை வரகு அரிசி போண்டா செய்து பாருங்க!

சூடான வரகு அரிசி போண்டா ரெடி.
இந்த போண்டாவை மாலை நேரங்களில் சட்னி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

MUST READ