Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!

பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!

-

பொட்டுக்கடலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை நம் உடலுக்கு தேவையான வளர்ச்சிக்கு உதவக்கூடியது. பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!இது செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. இதில் உள்ள நார் சத்துக்கள் செரிமான கோளாறுகளை குறைத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. பொட்டுக்கடலையில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. அதேசமயம் கலோரிகள் மிகக் குறைவாக இருக்கிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் பொட்டுக்கடலையை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!இது செரிமான பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக விளங்குகிறது. பொட்டுக்கடலையில் கொழுப்புகள் குறைவாக இருப்பதனால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் உற்பத்தியாவது தடுக்கப்பட்டு உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் இவை குடல் இயக்கத்தை எளிதாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பொட்டுக்கடலை என்பது பெண்களின் ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்தி ரத்தத்தின் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த பொட்டுக்கடலையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். பொட்டுக்கடலையில் இருக்கும் அற்புத நன்மைகள்!அந்த சமயங்களில் இந்த பொட்டுக்கடலை உண்பதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே பொட்டுக்கடலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் பொட்டுக்கடலையால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக அதை சாப்பிடுவதை தவிர்த்து மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ