நம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு பண்டங்களை அதிகம் விரும்பக் கூடியவர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது இனிப்பை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இனிப்பு சாப்பிடுவதால் பல தீமைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் பற்கள் சொத்தை ஆகும். உடலில் மந்தத்தன்மை அதிகரிக்கும். தேவையற்ற கொழுப்புகள் அதிகரித்து உடல் பருமன் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தொண்டை சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். எலும்புகள் பலவீனமாகும். குறிப்பாக சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வழிவகை செய்யும். இவ்வாறு பல தீமைகள் இனிப்பு பண்டங்களால் உண்டாகிறது. ஆனாலும் நாம் இனிப்பு சாப்பிடுவதை வைப்பது கிடையாது. இந்த நிலையில் இனிப்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தாலும் அது ஆபத்தானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது இனிப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் வேகமாக சர்க்கரையின் அளவு அதிகரிக்குமாம். எனவே இனிப்பு சாப்பிட்டதும் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இனிப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் ஏதேனும் காரம் கலந்த உணவுகளை சாப்பிடலாம் என்றும் அல்லது அதற்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஆகையால் நீங்களும் இனிப்பு சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்த்து விடுவது நல்லது. இல்லையென்றால் இனிப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்காதீர்கள். மேலும் இதனால் ஏதேனும் தொந்தரவு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.