கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரவும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஏற்ற ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்க்கலாம்.
1. கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கு கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர வேண்டும். கீரை வகைகளையும் சாப்பிட வேண்டும்.

2. பேரிச்சம்பழம், உலர் திராட்சை, பாதாம் ,முந்திரி, அத்திப்பழம் போன்றவைகளை சாப்பிடுவதால் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான ரத்த அளவு சீராக சென்றடையும். அதே சமயம் தாய்மார்களுக்கும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
3. பல வகைகளில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
4. வாரத்தில் மூன்று முறை மக்காச்சோளம் ஒன்றை வேகவைத்து சாப்பிடுவதனால் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
5. அதே சமயம் திணை, குதிரைவாலி, சாமை, வரகு, சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகை உணவுகளை எடுத்துக் கொள்வதனால் குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்துக்களும், கால்சியம் சத்துக்களும் கிடைக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
6. கொண்டைக்கடலை, பச்சை பயிறு, பருப்பு வகைகள், உளுந்தம் பருப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதாக இருந்தாலும் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்ற பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.


