Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!

ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!

-

- Advertisement -

ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!ஆண்களை விட பெண்கள் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் தொப்பையை குறைக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுவதும், கவலைப்படுவதும் பொதுவான ஒன்று. அந்த வகையில் உடல் எடையை குறைக்க ஜிம் தான் வழி என்பது கிடையாது. உணவு பழக்க வழக்கங்களும் வீட்டில் செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகளுமே கொழுப்பை கரைத்து நம்மை ஜம்முனு அழகாக வைத்திருக்கும்.

அதற்காக சிலவற்றை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதில் முதலில் சாப்பிட கூடாதவைகளை பற்றி பார்ப்போம். கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதாலும், சாப்பாட்டில் கட்டுப்பாடு இன்றி ஒர்க் அவுட் செய்வதாலும் எந்தவித பயனும் கிடையாது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மைதாவில் செய்த உணவு வகைகளையும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அதே சமயம் இனிப்பு பண்டங்கள், எண்ணெய்ப் பொருள்கள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாப்பிட வேண்டியவை:

நாள்தோறும் மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். மோர் அதிகமாக குடிக்கலாம். சாதத்தின் அளவை குறைத்து 300 கிராம் அளவில் காய்கறிகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜிம்முக்கு போகாமலேயே ஜம்முனு இருக்க இதை பண்ணுங்க!தினமும் வேறு வேறு வகையான காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை சாப்பிடலாம். ஆரஞ்சு, மாதுளை, பயிறு வகைகள் பருப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். காலை அல்லது மாலை லெமன் அல்லது கிரீன் டீ பருகலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து ஸ்பூன் வரை எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்.

அதே சமயம் சரியான தூக்கம் இல்லை என்றாலும் அதிகமாக எடை போடும். ஹார்மோனல் இம்பாலன்ஸ் ஏற்படும். எனவே இரவு 10 மணிக்குள் தூங்கி காலை 6 மணிக்குள் எழுந்திருப்பது நல்லது. தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம்.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் முன் உங்களின் மருத்துவரை ஒரு முறை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

MUST READ