Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா?

ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா?

-

- Advertisement -

ஆடு தீண்டாப் பாளை மூலிகையை ஆடு தின்னா பாளை என்றும் அழைப்பர். அதுமட்டுமில்லாமல் அம்புடம், அதல மூலி, பங்கம் பாளை என வேறு பெயர்களும் உண்டு. ஆடுகள் எந்தவித இலைகளையும் மென்று தின்ற வாழ்பவை. அத்தகைய ஆடுகள் இந்த மூலிகையை முகர்ந்து கூட பார்க்காதாம்.ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா? இதற்காக தான் இந்த மூலிகைக்கு ஆடு தீண்டாப் பாளை என்ற பெயர் வந்தது. இந்த மூலிகை தரையோடு ஒட்டி கொடியாக படர்ந்து வளரக்கூடியது. இதன் பூக்கள் கரு நீல நிறமுடையதாகவும் குச்சி போல் நீண்டதாகவும் காணப்படும்.

தற்போது இந்த ஆடு தீண்டாப் பாளை மூலிகையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.

ஆடு தீண்டாப் பாளை மூலிகையை யாரும் உணவாக பயன்படுத்துவது கிடையாது. ஏனெனில் இதை சாப்பிட்டவுடன் குமட்டல் ஏற்படும். எனவே இதை மருந்தாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆடு தீண்டாப் பாளையின் இலை, பூ, பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. இது குடல் பூச்சிகளை கொள்ளும் திறன் உடையது.ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா?

இது வாத நோய்களை குணமாக்குவது மட்டுமல்லாமல் சரும நோய்களை குணமாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பாம்பு கடி போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

பேறு கால வலி ஏற்படும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஆடு தீண்டாப் பாளையின் விதைகளை எடுத்து ஐந்து கிராம் அளவு சிற்றாமணக்கு எண்ணெயில் அரைத்துக் கொடுத்தால் உடனடியாக குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளையின் வேரை நிழலில் உலர்த்தி அதனை இடித்து பொடி செய்து 10 கிராம் அளவு பொடியை சிறிதளவு வெந்நீரில் கலந்து குடித்து வர பேறுகால வேதனை குறைந்து விரைவில் சுகப்பிரசவம் ஆகும்.ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா?

ஆடு தீண்டாப் பாளையின் இலை, காய், விதை, வேர், பட்டை, பூ ஆகிய அனைத்தையும் இடித்து அதன் சாறு பிழிந்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி சொறி, சிரங்கு போன்ற நோய்களுக்கு தடவி வர விரைவில் குணமடையும்.

இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.

MUST READ