Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மோமோஸ் விரும்பிகளா நீங்கள்?..... ஆபத்தான நோய் எச்சரிக்கை!

மோமோஸ் விரும்பிகளா நீங்கள்?….. ஆபத்தான நோய் எச்சரிக்கை!

-

இன்றுள்ள அவசர காலத்தில் சிட்டியில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் இல்லாததால் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அதன்படி ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதனால் அதில் கலக்கப்பட்டுள்ள அஜினமோட்டோ என்ற பொருளால் ஆபத்தான நோய்கள் உண்டாகும் என்பது பல பேருக்கு தெரிவதில்லை. அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட மாவின் காரணமாகவும் பல ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன. மோமோஸ் விரும்பிகளா நீங்கள்?..... ஆபத்தான நோய் எச்சரிக்கை!அந்த வகையில் மோமோஸ் என்ற உணவை அதிகம் சாப்பிடுபவர்கள் புற்றுநோய், மூலநோய், இதய நோய், ரத்த அழுத்தம், நீரழிவு நோய் அல்லது நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது.

மோமோஸ்களுக்கு சைடிஷாக கொடுக்கப்படும் சட்னி வகைகள் மிகவும் காரமானதாக இருப்பதால் அவை குடல் புண்களை உண்டாக்குவது மட்டுமல்லாமல் மூல நோய்க்கும் வழி வகை செய்கிறது. மேலும் இது செரிமான கோளாறுகளை உண்டாக்குகிறது.

மோமோஸில் உள்ள மோனோ சோடியம் குளுட்டமைன் இருதய பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு உடல் பருமனையும் அதிகரிக்க செய்கிறது.மோமோஸ் விரும்பிகளா நீங்கள்?..... ஆபத்தான நோய் எச்சரிக்கை!

குழந்தைகள் இந்த மோமோஸ் சாப்பிடுவதனால் இறப்பை குடல் நோய் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது போன்ற துரித உணவுகளும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற உணவுகளால் உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

MUST READ