spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!

-

- Advertisement -

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!சீதாப்பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பி1, பி2, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அந்த வகையில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்றவை எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளைக்கு தேவையான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் உற்பத்திக்கு பயன்படுகிறது. மேலும் நரம்பு பலவீனம் போன்றவற்றை இது குறைக்க உதவுகிறது.தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!

we-r-hiring

இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை எடுத்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு உயரும். மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு சக்தி தரும். இந்த பழம் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இது தவிர இதில் உள்ள வைட்டமின் சி தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தோலை பிரகாசமாக வைத்திருக்க உதவும். முடியின் வேரை பலப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!

குறிப்பு: 1. இருப்பினும் பழம் முழுமையாக பழுத்த பின்னரே சாப்பிடுவது நல்லது.

2. அடுத்தது சீதாப்பழத்தை, சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

3.மற்றவர்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு எடுத்துக் கொள்வது நல்லது.

MUST READ