spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மருந்தில்லா வாழ்வுக்கு உணவே மருந்து ; உடல் நலம் தரும் பூண்டின் குணங்கள்

மருந்தில்லா வாழ்வுக்கு உணவே மருந்து ; உடல் நலம் தரும் பூண்டின் குணங்கள்

-

- Advertisement -

உணவே மருந்து என்பதற்கேற்ப மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டினைப் பற்றி அறிந்துக் கொள்வோம்;

”உணவு உங்கள் மருந்தாகவும்,மருந்து  உங்கள் உணவாகவும் இருக்கட்டும்”,என ஆங்கில மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் கூறியுள்ளதிற்க்கு ஏற்றார் போல் தற்போதைய வாழ்க்கை முறையானது மாறியுள்ளது.நமக்கு வரும் நோயிற்க்கு காரணம் உணவு ,அதனை சரிப்படுத்தவும் உதவுவது உணவே ஆகும்.”அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” ,என்ற பழமொழிக்கு ஏற்ப நல்லது என நினைத்து சில பொருட்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் அதுவே நமக்கு பிரச்சனையாக வந்துவிடுகிறது.பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

we-r-hiring

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்;

  • தினமும் காலையில் ஒரு பல்லு பூண்டையெடுத்து நசுக்கி காற்றோட்டமாக சிறிது நேரம் வைத்த பிறகு அதை மென்று சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தும்.
  • பூண்டில் அல்லிசின் என்ற வேதிபொருள் நமது உடலில் உள்ள நைட்ரஸாக்சடை அதிகளவு உற்பத்தி செய்யும்.இதனால் இரத்தநாளங்கள் விரிவடைந்து இரத்தகொதிப்பு வருவது தடுக்கப்படுகிறது.மேலும் இரத்த நாள அடைப்பு வராமல் தடுக்கும்.குடலுக்கும் நல்லது.ஜீரணமண்டலம் சீராகும்.மூளைக்கும் நல்லது.செல்களைப் பாதுகாக்கும்.
  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் பூண்டினை சாப்பிடுவதால் இன்சூலின் ரெசிஸ்டன்ஸ் குறையும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பினையும் அதிகரிக்கும்.
  • சளி ,ஜீரம் இருப்பவர்கள் பூண்டு ரசம் சாப்பிடுவதால் உடல் நலம் குணமாகும்.நோய் எதிர்ப்புசக்தியினை அதிகரிக்கும்.

பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும்  விளைவுகள்;

  • தினமும் 4 அல்லது 5 பூண்டுப்பல்லை மட்டும் சாப்பிட வேண்டும்.அதற்கு மேல் சாப்பிடுவதால் இரத்தப்போக்கு ஏற்படும்.
  • ஆன்டித்ரொபெடிக் பிராப்பர்டிசி இருப்பதால் இரத்தம் உறைதலை தடுப்பதால் இரத்தப்போக்கு அதிகமாகிறது.
  • அறுவைசிகிச்சை செய்த நேரத்தில் பூண்டினை அதிகளவு சாப்பிடக்கூடாது. அதிகளவு சாப்பிட்டால் புண் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கல்லீரல் பாதிப்படையும்.அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.

MUST READ