பனங்கிழங்கின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.
பனங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது. அதாவது பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் வயிற்று மந்தம் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் உறுதித் தன்மை, தசை வளர்ச்சி, பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பனங்கிழங்கில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இது நீண்ட நேரம் பசியில்லாத உணர்வைத் தரும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பனங்கிழங்கை தினமும் சாப்பிடலாம்.
மாதவிடாய் வலி, ஹார்மோன்கள் சமநிலை போன்ற பிரச்சனைகளுக்கும் பனங்கிழங்கு நிவாரணம் தரும். இது தவிர பனங்கிழங்கு என்பது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பனங்கிழங்கு பொதுவாக குளிர்ச்சி தரக்கூடியது. அதே சமயம் இதை குளிர்காலத்தில் சாப்பிடும் போது உடல் வெப்பம் சீராக இருக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது இந்த பனங்கிழங்கு. அடுத்தது இதில் உள்ள வைட்டமின்கள், புரதச்சத்து போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
பனங்கிழங்கானது சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்வதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
எனவே பனங்கிழங்கை பொரியல், குழம்பு, வறுவல் என பலவகையில் சமைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
1. இதை சமைக்காமல் சாப்பிடக்கூடாது.
2. கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் என யாராக இருந்தாலும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
3. வேகவைத்து சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.
4. இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.


