Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ..... இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ….. இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!

-

- Advertisement -

கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் எவ்வளவுதான் பார்த்து பார்த்து சாப்பிட்டாலும் ஏழு மாதத்திற்கு பிறகு ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடுகிறது. நிறை மாதத்திற்கு பின்னர் ஹீமோகுளோபின் குறைவது அவர்களின் பிரசவத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் பலரும் எச்சரிப்பதுண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ..... இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!எனவே அதனை தவிர்க்க ஒரே ஒரு ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். நான்கே நாட்களில் ஹீமோகுளோபின் அதிகமாகிவிடும்.

சுவரொட்டி வருவல் செய்வது எப்படி?

சுவரொட்டி வருவல் செய்ய முதலில் ஆட்டு மண்ணீரல் 250 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ..... இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!மண்ணீரல் நன்கு வெந்த பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கிராம்பு, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின் அதில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும். தேவைப்பட்டாலும் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் அதிகமான காரம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இப்போது அப்படியே மூடி போட்டு மசாலா வாசனை போகும் வரை வேகவிட வேண்டும். இடையிடையில் கிளறி விடுவது நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடா? ..... இந்த ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க!குறைவான தீயில் 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். கல்லீரல் நிறம் மாறி அடர் சாம்பல் நிறமாக மாறும். அதன் பிறகு மீண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தழைகளையும் தூவி இறக்கிவிட வேண்டும்.

இப்போது அருமையான சுவரொட்டி வருவல் தயார். இதனை சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு சைடிஷாக சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடுவது நல்லது.

MUST READ