Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் மயோனைஸ்.... எப்படி செய்வது?

குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் மயோனைஸ்…. எப்படி செய்வது?

-

- Advertisement -

பொதுவாக கடைகளில் விற்கப்படும் சாண்ட்விஜ், ஷவர்மா போன்றவைகளுக்கு மயோனைஸ் என்பது மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது பச்சை முட்டைகளில் செய்வதால் நீண்ட நாட்களுக்கு அதை பராமரிப்பது கடினம். குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் மயோனைஸ்.... எப்படி செய்வது?அப்படியே அதை நீண்ட நாட்களுக்குப் பிறகு சாப்பிட்டாலும் அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்து வாந்தி, மயக்கம், பேதி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது அவர்களுக்கு பெரும்பாலான சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே வீட்டிலேயே ஆரோக்கியமாக மயோனைஸ் செய்து குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் சாப்பிடலாம். ஆரோக்கியமான மயோனைஸ் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் மயோனைஸ்.... எப்படி செய்வது?

1. முதலில் 20 முதல் 30 முந்திரிப் பருப்பினை மிதமான வெந்நீரில் அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் மாற்ற வேண்டும். அத்துடன் 3 முத்ல் 4 பல் பூண்டு, 5 முதல் 6 வெள்ளை அல்லது கருப்பு மிளகு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நன்கு கெட்டியான பதத்திற்கு கிடைக்கும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தரும் மயோனைஸ்.... எப்படி செய்வது?

2. மூன்று முட்டைகளை எடுத்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் நீக்கி, அதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் 3 பல் பூண்டு, 6 மிளகு, 2 ஸ்பூன் வினிகர், 1 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு முறைகளும் மிகவும் ஆரோக்கியமானது. இதனை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும் இதை பாட்டிலில் அடைத்து, பிரிட்ஜில் வைத்து, பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

MUST READ