கோதுமை மாவு புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
கோதுமை மாவு புட்டு செய்ய முதலில் மாவினை நன்கு சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றாமல் மாவைக் கொட்டி மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும்.
அதன் பின் மாவை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். அதே சமயம் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை சூடாக்கி அந்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கட்டிகள் இல்லாமல் கிளறி விட வேண்டும்.
அதிகமாக தண்ணீர் விட்டு இசையாமல் புட்டு செய்யும் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது புட்டுக்குழலை எடுத்து அதில் பாதி அளவு மாவு போட்டு அதன் மேல் தேங்காய் துருவல் சிறிதளவு போட்டு பின்னர் மீண்டும் மாவு போட்டு மீண்டும் தேங்காய் துருவல் போட்டு வைக்க வேண்டும். அதாவது மாவு தேங்காய், துருவல் மாறி மாறி இருக்கும் படி புட்டுக் குழலில் வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும். பத்து நிமிடங்கள் வரை மாவை வேக வைத்து பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது புட்டு தயாராகிவிட்டது. அதை அப்படியே தட்டில் மாற்றி, சர்க்கரை கலந்து சூடாக பரிமாறலாம்.
இந்தக் கோதுமை மாவு புட்டிற்கு வாழைப்பழம், வேகவைத்த பாசிப்பயறு ஆகியவைகளை சைடிஷாக எடுத்துக் கொள்ளலாம். கோதுமை மாவில் நார்ச்சத்து இருப்பதனால் இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வளிக்கும்.