செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
செவ்வாழை – 2
தேங்காய் துருவல் – அரை கப்
ஏலக்காய் – 2
முந்திரிப்பருப்பு – 5
அரிசி மாவு – கால் கப்
கோதுமை மாவு – கால் கப்
வெல்லம் – 200 கிராம்
ரவை – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – தேவையான அளவு
செய்முறை:
செவ்வாழை இனிப்பு பணியாரம் செய்ய முதலில் செவ்வாழைப்பழத்தினை மசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது ஏலக்காயினை தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் வெல்லத்தினை காய்ச்சி அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது மசித்து வைத்துள்ள செவ்வாழைப்பழம், அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதில் உப்பு, வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
அதன் பின்னர் தட்டி வைத்திருக்கும் ஏலக்காய், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் நெய் விட்டு தடவி அதில் கலந்து வைத்திருக்கும் மாவினை ஊற்ற வேண்டும். இருபுறமும் பிரட்டி போட்டு பணியாரம் பொன்னிறமாக மாறும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். டேஸ்டான செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் தயார்.
குறிப்பு:
உங்களின் தேவைக்கேற்ப வெல்லத்தினை கூடவோ குறையவோ சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காயை துருவலாக இல்லாமல் தேங்காய் பாலாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.