spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சோயா கைமா தோசை செய்வது எப்படி?

சோயா கைமா தோசை செய்வது எப்படி?

-

- Advertisement -

சோயா கைமா தோசை செய்வது எப்படி?சோயா கைமா தோசை செய்வது எப்படி?

சோயா கைமா தோசை செய்ய தேவையான பொருட்கள்:
தோசை மாவு – இரண்டு கப்
எண்ணெய் – தேவையான அளவு
சோயா – 100 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

we-r-hiring

செய்முறை:
முதலில் வெங்காயத்தை இரண்டாக நறுக்கி, அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் சோயாவை கழுவி அதனை மிக்ஸியில் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.சோயா கைமா தோசை செய்வது எப்படி?

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். அத்துடன் அரைத்து வைத்த சோயா சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பின் நான்கு நிமிடங்கள் சோயாவை வேக வைக்க வேண்டும். சோயா வெந்து முட்டை பொடிமாஸ் போல் இருக்கும். அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட வேண்டும்.

இப்போது சோயா கைமா தயார்.

இச்சமயத்தில் தோசை கல்லை காயவைத்து, கல் சூடான பின் அதில் தோசை மாவை ஊற்றி நன்கு வெந்து வந்த பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் கைமா கலவையை இரண்டு ஸ்பூன் அளவு ஊற்றி பரப்பி விட வேண்டும்.சோயா கைமா தோசை செய்வது எப்படி?

அதே சமயம் தோசையின் மீது சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் வேக விட்டு எடுக்க வேண்டும்.

இப்போது அருமையான சுவையில் சோயா கைமா தோசை தயார். இதனை சூடாக பரிமாறவும்.

MUST READ