Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஹோம் மேட் காஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

ஹோம் மேட் காஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

-

ஹோம் மேட் காஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

காஃபி ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:

ஐஸ்கிரீம் – 300 மில்லி
கண்டன்ஸ்டு மில்க் – 200 கிராம்
இன்ஸ்டன்ட் காஃபி பவுடர் – 2 ஸ்பூன்
தண்ணீர் – சிறிதளவுஹோம் மேட் காஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

காஃபி ஐஸ்கிரீம் செய்யும் முறை:

காஃபி ஐஸ்கிரீம் செய்ய முதலில் தண்ணீரை சுட வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் மட்டுமே தேவைப்படும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் காஃபி பவுடரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு சூடான தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கன்சிடென்ட் மில்க் எடுத்து காஃபி கலவையை அதில் ஊற்றி நன்கு கலந்து சில நிமிடங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தில் க்ரீமை எடுத்து கண்டன்ஸ்டு மில்க் கலவையில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இப்போது இந்த கலவையை தனியாக ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து அதை மீண்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.ஹோம் மேட் காஃபி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

பின்னர் அரைத்த கலவையை மற்றொரு டப்பாவில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும்.

எட்டு மணி நேரங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் காஃபி ஐஸ்கிரீம் நன்றாக தயாராகி இருக்கும்.

இப்போது பரிமாறும் போது அதில் ஒரு ஸ்பூன் அளவு தேனை பரப்பி பரிமாறலாம்.

MUST READ