Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை...... மருத்துவ குணங்கள்!

மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை…… மருத்துவ குணங்கள்!

-

ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை...... மருத்துவ குணங்கள்!

மூலிகை வகைகளில் ஆடாதொடையும் ஒன்று. இதற்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசை ஆடாதொடை, நெடும்பா என வேறு பெயர்களும் உள்ளது. இந்த ஆடாதொடை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகை வகையாகும். மா இலைகள் போன்று இதன் இலைகள் இருக்கும் இதன் பூக்கள் மென்மையானதாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. இதன் பூ மட்டுமல்லாமல் இலை, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணமுடையது. ஆடாதொடை என்பது வயிற்றில் உள்ள பூச்சியை கொல்லும். வாய்வு கோளாறுகளை நீக்கும். அதேசமயம் மூச்சுத் திணறலை சரி செய்யும். சிறுநீரை பெருக்கும்.மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை...... மருத்துவ குணங்கள்!ஆடாதொடை கண் வலிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

காச நோய்க்கு இந்த ஆடாதொடை மிகச்சிறந்த மருந்தாக உதவுகிறது. அந்த வகையில் இதன் இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அதனை வடிகட்டி காலை, மாலை என இரு வேளைகளில் தேன் கலந்து பருகி வர கசரோகம் விரைவில் குணமடையும்.

மேலும் நுரையீரலில் தேங்கியிருக்கும் கபத்தை வெளியேற்றவும் இது பயன்படுகிறது. அதன்படி ஆடாதொடை இலைகளை கசக்கிப் பிழிந்து அதன் சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மூச்சு திணறல் உடனடியாக சரியாகும். ரத்த வாந்தி, இருமல் போன்ற பிரச்சனைகளும் குணமடையும்.மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை...... மருத்துவ குணங்கள்!

இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ