Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

-

பெருஞ்சீரகம் என்பது நம் வீட்டு சமையல் அறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மருந்து. பெருஞ்சீரகத்தில் கால்சியம் , பாஸ்பேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்! இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதலமும் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பெருஞ்சீரகத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தின் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது உடலுக்கு தேவையான துத்தநாகம் போன்ற தாதுக்களை வழங்குகிறது. இத்தாதுக்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் ஆக்ஸிஜனின் சமநிலையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் சருமத்தில் குளிர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்துவதில் பெருஞ்சீரகத்திற்கு பங்கு உண்டு. இது நம் சருமத்திற்கு பளபளத்தை தரும்.பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

பெருஞ்சீரக விதை செரிமான பிரச்சனைக்கும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைக்கும் தீர்வாக பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை வயிறு உப்புசம் போன்ற பிரச்சனை ஏற்படும் சமயங்களில் இந்த பெருஞ்சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் சமயத்தில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர நல்ல தீர்வு கிடைக்கும். பெரியவர்கள் அரை டம்ளரில் இருந்து ஒரு டம்ளர் வரை எடுத்துக் கொள்ளலாம்.

பெருஞ்சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது கண்பார்வையை அதிகரிக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும் பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரக்க இந்த பெருஞ்சீரகத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.பெருஞ்சீரகத்தில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

இருப்பினும் உடம்பில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதேசமயம் பெருஞ்சீரகத்தினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக அதனை தவிர்த்து விடுங்கள்.

MUST READ