வெந்தயம் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்.
வெந்தயம் என்பது நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் இது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவையாகும். அந்த வகையில் இது நீரிழிவு நோய், முடி மற்றும் தோல் நலம், செரிமானக் கோளாறு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இதுதவிர தாய்ப்பால் உற்பத்தி, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.

எனவே தினமும் வெந்தயத்தை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகள் உண்டாகக்கூடும். எனவே மிதமான அளவில் பயன்படுத்துவதே சிறந்தது.
வெந்தயத்தில் இருக்கும் கலாக்டோமானன் என்ற நார் மற்றும் அமினோ அமிலங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
வெந்தயம் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதயத்தில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
வெந்தயத்தில் உள்ள புரதம், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவை முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனையை தீர்க்கும். எனவே வெந்தயத்தை ஊற வைத்து விழுதாக அரைத்து அதை தலையில் தேய்த்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதை போல் இதை முகத்தில் தேய்த்தால் முகப்பருக்கள் குறையும்.
வெந்தயம் என்பது இயற்கையான செரிமான தூண்டி என்று சொல்லலாம். இது அஜீரணத்தை சரி செய்து மலச்சிக்கலுக்கு தீர்வு தரும்.
வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும் வெந்தயம் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் வயிற்று வலி, ஹார்மோன் சீர்கேடு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
அடுத்தது வெந்தயம் மூட்டு வலி, உடல் வலி, ஆஸ்துமா போன்றவற்றையும் குணப்படுத்த உதவி செய்கிறது.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


